Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மணிரத்னம் படம் என்றாலே அப்படத்திற்கு ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்றார் போல் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

கடைசியாக இவர் இயக்கிய காற்று வெளியிடை ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது என்பது ரசிகர்களுக்கு பெறும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.