Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை இம்பிரஸ் செய்த பிரபாஸை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஷ்ரத்தா கபூர்

இந்திய அளவில் பிரபலமான நடிகராகி விட்டார் பிரபாஸ். ஒரு படத்துக்காக 5 வருடம் கஷ்டப்பட்டாலும் அதற்கான பலன் நன்றாகவே கிடைத்திருக்கிறது அவருக்கு.

தற்போது பாகுபலி என்ற படத்திற்கு பிறகு சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக கமிட்டாகி இருக்கும் ஷ்ரத்தா கபூருக்கு 18 வகை உணவுகள் அடங்கிய விருந்து கொடுத்து பிரபாஸ் அவரை அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஷ்ரத்தா கபூர் பிரபாஸ் நடித்த படங்களின் விபரங்களை எல்லாம் தெரிவித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.