Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்

இயக்குனர் விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து முதன் முதலாக இயக்கிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, அதோடு படத்தில் இடம்பெறும் ஒரு பாடலையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இன்று ( அக்டோபர் 16) இப்பட இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு ஒரு தர லோக்கல் பாடல் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் தான் நடித்திருப்பதாக நடிகர் கலையரசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் எப்போதும் துணை நடிகர் வேடத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.