Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கமல்ஹாசன் ரசிகர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு சமீபத்தில் ஒரு தகவல் வந்தது. அது என்னவென்றால் ஷங்கர், கமல் கூட்டணியில் இந்தியன் 2 தயாராக இருப்பது தான்.

இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக ஷங்கரே, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய BiggBoss நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆனால் இப்படத்தை தற்போது லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அதோடு படத்திற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் படத்தை பற்றி தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்னும் படக்குழுவிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.