Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துபாயில் விஜய் ரசிகர்கள் காட்டிய மாஸ்- புகைப்படம் உள்ளே

விஜய்யின் மெர்சல் படம் தமிழ்நாட்டை தாண்டி இப்போது பல இடங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி படக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை நிறைய பேர் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் உள்ள கலேரியா சினிமா வளாகத்தில் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு 5 ரூபாய் மதிப்புள்ள விஜய் படம் பொறித்த இந்திய தபால் தலையை அறிமுகம் செய்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.