விஜய்யின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி இடத்தில் இருக்கிறது. வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் அண்மையில் ஆந்திராவில் வெளியாகியிருந்தது. தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் படத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
படத்திற்கு தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் இன்னும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக மெர்சல் பட தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஆந்திராவில் விஜய் சூப்பர் ஸ்டாராக ஆவார், அதற்கு இந்த படம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.