Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோழர் நயன்தாரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்- பிரபல இயக்குனர்

நயன்தாராவின் அறம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சாதி, மதம் என எந்த ஒரு விஷயமும் இல்லாமல் முழுக்க முழுக்க மக்களின் பிரச்சனையை பேசும் படமாக அமைந்துள்ளது.

படத்தில் நயன்தாராவின் நடிப்பை தாண்டி திரைக்கதை, வசனம் என அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர்போராடு, இயக்குனர், படக்குழுவினர்க்கும் தோழர் நயன்தாரா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் என பதிவு செய்துள்ளார்.