மேகா ஆகாஷ் தமிழ் சினிமா இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த ஒரு இளம் நடிகை. இவரது நடிப்பில் இதுவரை ஒரே ஒரு படம் மட்டும் தான் வெளியாகியுள்ளது அதுவும் தெலுங்கில். தமிழில் இவர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மேகா ஆகாஷ், கண்ணன் அவர்களின் இயக்கத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இப்படத்தில் மேகா ஆகாஷ் Viscom படிக்கும் மாணவியாக நடிக்கிறாராம். அவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவரை கமிட் செய்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.