Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு பார்வையாளராக அறம் படத்தில் இது பிடிக்கவில்லை- பிரபல நடிகையின் டுவிட்

கோபி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் அறம். இப்படம் நடிகை, இயக்குனர் என்பதை தாண்டி அழுத்தமான கதையால் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. படமும் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இப்படத்தை அண்மையில் பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், அறம் படம் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.

படத்தில் 2 பிடிக்காத விஷயங்கள் இருக்கிறது. இறுதியில் தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் ஹீரோ, அவனை கொண்டாவில்லை என்பது வருத்தம். இரண்டாவது குழியில் இருந்து வெளியே எடுத்த அச்சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யாமல் அவரது காலில் விழ வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.