Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் பெயர் வந்த 10 நிமிடத்தில் அஜித் படம் செய்த சாதனை- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அஜித்தின் விவேகம் படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தது.

இந்த நிலையில் அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று வியாழக்கிழமை அஜித்தின் புதிய பட பெயர் விசுவாசம் என்று படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகளவில் 4வது இடத்திலும், இந்திய அளவில் 1வது இடத்திலும் விசுவாசம் டிரண்ட் ஆகியுள்ளது.