Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 மணி நேரத்தில் இத்தனை கோடியா? அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ட்ரைலர் - வீடியோ உள்ளே

ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் போதாது. அதில் தற்போது ரசிகர்களின் நாடித்துடிப்பாக மாறியிருப்பது அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார். படம் வெளியாவது வரும் 2018 மே 4 ல் தான்.

சூப்பர் ஹீரோக்கள் பட லிஸ்டில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் முன்னணி வகிப்பது மார்வல். இந்நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ட்ரெய்லர் கடந்த நவம்பர் 29 ல் வெளியானது.

இணையதளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 23 கோடி பேர் பார்த்துள்ளனர். அதாவது 230 மில்லியன் வியூஸ். ஆனால் இதற்கு முன்பு இட் என்ற படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 19 கோடி பேர் பார்த்திருந்தனர்.

தற்போதை இதை முறியடித்து அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் சாதனை படைத்துள்ளது. மேலும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.