Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன்- சமந்தா பட பெயர் இதுதானா?- வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகைகளுடன் கூட்டணி அமைத்து வருகிறார். வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார்.

சிம்ரன், சமந்தா, சூரி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க பாலா சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்திற்கு படக்குழு சீமராஜா என்று பெயரிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தலைப்பு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.