Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? சர்வதேச மேடை 2017

ஆண்டுக்கு அளவில்லாமல் படங்கள் எடுக்கப்பட்டாலும் சில படங்கள் தான் வெளிவருகிறது. பலத்த போட்டிக்கு நடுவிலும் சில மிக சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகிறது.

அவை எல்லாம் இருந்தாலும் ஒரு சில படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிருகிறது. இந்த 2017 வருடத்திற்காக சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.

இவ்வருடம் தலைமை விருந்தினராக அரவிந்த் சாமி கலந்துகொள்கிறார். மேலும் இந்தியன் பனோரமா 12 படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் என் மகன் மகிழ்வன் (MY SON IS GAY ) என்ற படம் சிறப்பு காட்சி செய்யப்படுகிறது. இவ்விழாவில் போட்டியிட 12 படங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளது. அதன் வரிசை கீழே..

1. 8 தோட்டாக்கள்

2. அறம்

3. கடுகு

4. குரங்கு பொம்மை

5. மாநகரம்

6. மகளிர் மட்டும்

7. மனுசங்கடா

8. ஒரு கிடாயின் கருணை மனு

9. ஒரு குப்பை கதை

10. தரமணி

11. துப்பறிவாளன்

12. விக்ரம் வேதா