Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் நஷ்டத்தால் இத்தனை கோடியை திருப்பிக்கொடுத்தாரா ஷாருக்கான்

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக எல்லோருக்கும் லாபம் தரும் வகையில் அமைந்த படம் சென்னை எக்ஸ்ப்ரஸ் மட்டும் தான்.

அதை தொடர்ந்து வந்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது, இவரும் அந்த படங்களுக்கு நஷ்ட தொகையை கொடுத்து தான் வருகின்றார்.

இந்நிலையில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாருக், அனுஷ்கா சர்மா நடித்த ’ஜப் ஹாரி மெட் சேஜல்’ படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது.

இப்படத்தை சுமார் ரூ 80 கோடி வரை என்.ஜெச் ஸ்டூடியோஸ் வாங்கியது, ஆனால், படத்தின் ஷேர் ரூ 35 கோடி வரை தான் கிடைத்ததால், இதனால், சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் ஷாருக்கான் நஷ்ட ஈடு கொடுத்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.