Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய்யின் சாதனையை முறியடித்த பிரபல தெலுங்கு நடிகர்

தெலுங்கு சினிமாவில் நிறைய பிரபலமான நடிகர்கள் உள்ளனர். அதில் தெலுங்கை தாண்டி கேரளாவிலும் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த துவ்வட ஜகன்னாதம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகி இரண்டே மாதத்தில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன் வெளியான சர்ரைனோடு படம் கூட 12 கோடி பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

தமிழில் இணைய தளங்களில் சாதனை படைக்கும் அஜித், விஜய் படங்களை தாண்டி அல்லு அர்ஜுன் படங்கள் சாதனை படைத்து முதல் இடத்தில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.