Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்னும் நிறைய டயலாக் பேசியிருக்கனும், ஆனால்- நாச்சியார் வசனம் குறித்து ஜோதிகா

ஜோதிகா தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்து அவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள நாச்சியார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர் வெளியாகி அதில் ஜோதிகா பேசியிருந்த கெட்ட வார்த்தை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜோதிகா முதன்முறையாக கூறுகையில், நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தை தான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள்.

ஒரு பெண் முதன்முறையாக பேசியதால் தான் விவாதம் ஆகியிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது, இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன். கதையில் ஒரு பகுதி, பொருத்தமான இடத்தில் வசனம் வரும், படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாக பேசியுள்ளார்.