Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனன் மீண்டும் அந்த பிரபல நடிகருடன் இணைகிறாரா- ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது தானா?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மீண்டும் அவருடன் கௌதம் மேனன் இணைய வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர்கள் பலர். அதேபோல் அப்படம் மூலம் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் அருண்விஜய்.

தற்போது ஒரு தகவல் வருகிறது, அது என்னவென்றால், கௌதம் மேனன்-அருண் விஜய் இணைந்து ஒரு புதிய படத்தை எடுத்துவிட்டதாகவும் விரைவில் அந்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அருண்விஜய் டுவிட்டரில், தடம் படப்பிடிப்பு முடிந்தது. ஒரு நல்ல படத்துக்காக வேலை செய்கிறேன், விரைவில் உங்களிடம் அறிவிப்பேன், சர்ப்ரைஸ் என பதிவு செய்துள்ளார்.