தளபதி விஜய் நடிப்பில் தற்போது தளபதி-62 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்தது.
இப்படத்தின் டீசர் ஒரே நாளில் 11 மில்லியன் ஹிட்ஸ் அடித்து சாதனை படைத்தது, இதை காலா முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், காலா ஒரு நாள் முடிவில் 8.7 மில்லியன் ஹிட்ஸ் தான் அடித்துள்ளது, இதனால், தற்போதும் விஜய் தான் நம்பர் 1.
மேலும், இதில் காலா டீசர் சொன்ன நேரத்திற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.