Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு சினிமாவில் ரஜினியின் காலா படத்திற்கு இப்படி ஒரு சோகமா?

காலா படத்திற்கு முன் ரஜினியின் 2.0 படம் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் முதலில் வெளியாக இருப்பது ரஜினியின் காலா தான்.

அண்மையில் வெளியான இப்பட டீஸர் தமிழில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது, ஆனால் தெலுங்கு மீடியாக்களில் படத்தின் டீஸர் கபாலி படம் போலவே உள்ளதாக விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கு நடுவில் தெலுங்கில் காலா படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம். காரணம் கபாலி படம் கொடுத்த நஷ்டம். 2.0 படம் முதலில் வெளியாகும் நஷ்டத்தை சரிசெய்து விடலாம் என்று நினைத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியை தந்துள்ளது.

கபாலி பட விலையை விட இதற்கு அதிகம் படக்குழு சொல்கின்றனராம். இதனால் சொன்ன விலைக்கு படத்தை யாரும் வாங்கவில்லை என்றால் சொந்தமாகவே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.