Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோடியை எதிர்க்கின்றதா காலா- சுவாரஸ்ய குறியீடுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ஆனால், ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்ததில் இருந்து மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கின்றார் ரஜினி.

இந்நிலையில் காலா டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே இலங்கை சம்மந்தப்பட்ட புத்தகத்தை ரஜினி வைத்துள்ளார் என்று நம் தளத்திலேயே கூறியிருந்தோம், மேலும், மோடியின் சிறப்பு வாசகம் க்ளீன் இந்தியா தான்.

அதை டீசரில் நடிகர் நானா படேகர் சொல்ல, அதை ரஜினி எதிர்த்து பேசுகின்றார், இதனால், மோடிக்கு எதிராக மறைமுகமாக சில வசனங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை, வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகின்றது.

ரஜினி கையில் டாட்டூ, தேசியக்கொடியில் காவி நிறத்திற்கு பதிலாக வேறு கலர், ஒடுக்கப்பட்டோர் வாசக பேனர் என டீசரிலேயே வெறும் குறியீடு தான்.

தற்போது எல்லோர் பார்வையும் டீசரிலேயே இத்தனை குறியீடு என்றால் படத்தில் எவ்வளவு இருக்கும் என்பதே, பொறுத்திருந்து பார்ப்போம்.