Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாங்க அஜித் இப்படி, ரசிகர்கள் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள், தல கேட்பாரா?

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சொல். அந்த அளவிற்கு மிகப்பிரமாண்டமான ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர்.

இவர் சமீப காலமாக தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகின்றார், அதிலும் குறிப்பாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே தான் இவர் நடிக்கின்றார்.

காதல் காட்சிகளை பெரும்பாலும் நடிக்க மறுத்து வருகின்றார், இப்படியிருக்க அஜித் நடிப்பில் இதே நாள் 20 வருடங்களுக்கு முன் வந்த படம் தான் காதல் மன்னன்.

அஜித் ரசிகர்களின் மோஸ்ட் பேவரட் படம் என்றால் காதல் மன்னனாக தான் இருக்கும், அஜித் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல மிக முக்கியமான காரணமாக இப்படம் அமைந்தது.

ஒரு மெக்கானிக் பையனாக இருந்துக்கொண்டு ஒரு பணக்கார பெண்ணை அஜித் எப்படி கைப்பிடிக்கின்றார் என்பதை இயக்குனர் சரண் தன் விறுவிறுப்பாக திரைக்கதையால் ரசிக்க வைத்திருப்பார்.

அதோடு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இப்படத்தில் மெஸ் ஓனராக கலக்கியிருப்பார், திலோத்தமா இந்த பெயர் அந்த தருணத்தில் மட்டுமின்றி தற்போது வரை மிகவும் பேமஸ்.

ஒரு ரூபாய்க்கு பெட் கட்டுவது, கையில் சொடுக்கு போட்டு அதில் வெற்றி பெறுவது என அஜித்தின் மேனரிசம் பட்டையை கிளப்பியது.

அஜித்தை இப்படி ஒரு துறுதுறு கதாபாத்திரத்தில் தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள், ஆனால், அஜித் இன்னும் துப்பாக்கி, கோட், கண்ணாடி என்றே இருக்கின்றார், தல வாங்க கொஞ்சம் இந்த ரூட்டிற்கும்.