Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியது இதுனால் தானா?- வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் பட வெற்றியை தொடர்ந்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன், ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன்-சிவகார்த்திகேயன் கூட்டணி தற்போதைக்கு இல்லை என்றும் தகவல் வந்தன. விக்னேஷ் சிவன்-சிவகார்த்திகேயன் கூட்டணியை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்தனர், இப்போது இல்லை என்பது அவர்களுக்கு வருத்தம் தான்.

இப்படத்தை தயாரிக்க இருந்த ஸ்டூடியோ கிரீன் உடனே ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்களாம். அதனாலேயே விக்னேஷ் சிவனை சீக்கிரமே கதை தயார் செய்ய கூறினார்களாம். ஆனால் அவருக்கு அவசரமாக படம் இயக்கும் எண்ணம் இல்லை என்பதாலேயே அவர் விலகியுள்ளாராம்.

தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இயக்குனர் ராஜேஷ் அவர்களை கமிட் செய்துள்ளனர்.