Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட இதிலும் விஜய்யின் மெர்சலுக்கு முதல் இடம்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற படம் விஜய்யின் மெர்சல். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ் என நடிகர்கள் பட்டாளமே நடித்த இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

ஆனால் இப்படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என்பது நமக்கே தெரியும். வசூல் முதல் பாடல்களை வரை இப்படம் நிறைய விஷயங்களில் சாதனை படைத்திருக்கிறது.

இப்போது என்ன தகவல் என்றால் ஆங்கில நாளிதழில் 2017ம் ஆண்டின் சிறந்த மெலோடி பாடல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் இடத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற நீதானே என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இப்பாடலில் விஜய் மற்றும் சமந்தா இருவரும் கலக்கியிருப்பர்.