Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் படத்தில் இந்த வில்லன் நடிகர் நடிக்கவில்லையா? வெளியான தகவல்

சிவா-அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் என்ற படம் தயாராக இருக்கிறது. படத்தின் தகவல்கள் வந்த உடனே ரசிகர்கள் உற்சாகமாக இந்த தீபாவளி தல தீபாவளி என்று எல்லாம் கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆனால் நடுவில் சினிமா ஸ்ட்ரைக் ஆரம்பித்த உடனேயே ரசிகர்கள் தீபாவளிக்கு படம் வெளியாகுமா என்ற பெரிய கேள்வியில் உள்ளனர்.

இந்த நேரத்தில் சிவா-ஆர்.கே.சுரேஷ் இணைந்த எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாக படத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ரசிகர்களும் செய்தியை ஷேர் செய்ய தற்போது அச்செய்தியை மறுத்திருக்கிறார் நடிகர்.

நாங்கள் இருவரும் எதர்ச்சையாக சந்தித்தோம், சிவா அவர்கள் என்னுடைய உறவினரும் கூட. இதனால் நான் படத்தில் நடிக்கிறேன் என்று கூறவது எல்லாம் பொய் என தெரிவித்துள்ளார்.