Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் வெளியாகும் முன்பே இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பிரபல இயக்குனர் கொடுத்த பரிசு!

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கப்போகிறார் என்பது அண்மையில் வந்த சூடான செய்தி. ஜிகர்தண்டா, இறைவி படங்கள் மூலம் இவர் மிகப்பிரபலமானவர்.

இந்நிலையில் அவர் பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள மெர்குரி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை சினிமாவை சேர்ந்த மற்ற பிரபலங்களுக்கு பிரீவியூ காண்பிக்கப்பட்டுள்ளது.

இதில் படத்தை பார்த்த அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா பிரம்மிப்பாகியுள்ளார். மெர்குரி மிகவும் ஆழமான கதை. பிரபுதேவா நன்றாக நடித்திருக்கிறார்.

தொழில்நுட்ப வேலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. இசை, ஆர்ட் வேலைகள் என அனைத்தும் மனதை ஈர்த்தது. படத்தை நான் ரசித்தேன். நல்ல அனுபவமாக இருந்தது என தன் வாழ்த்துப்பரிசை கொடுத்துள்ளார்.