Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகா நடிக்க போகும் புதிய படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளரா?

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி கலக்கி வருகிறார்.

இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் மக்களிடம் நல்ல பாராட்டுக்களை பெறுவதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலும் செய்கிறது. இவர் அடுத்து ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான Tumhari Sulu என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு கூட தமிழில் காற்றின் மொழி என்று பெயரிட்டுள்ளனர்.

ராதா மோகன் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.எச். காசீப் கமிட்டாகலாம் என்று கூறப்படுகிறது. ஏ.ஆர். ரகுமானின் உறவினரான இவர் சில பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது ஆனால் படக்குழு தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.