Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீரம் பட பிரபலங்கள் விஸ்வாசம் படத்திலா?- அதுவும் இத்தனை பேரா? ஸ்பெஷல் விஷயம்

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திரல் நடந்து வருகிறது. அஜித் எப்போதும் இல்லாத வழக்கமாக படப்பிடிப்பில் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

தினமும் அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்களும் தங்களது டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் விசுவாசம் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீரம் படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மற்றும் கலைராணி ஆகியோர் இப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் விசுவாசம் படத்தில் வீரம் பட பிரபலங்கள் பலர் நடிக்கலாம் என்கின்றனர்.