Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரேமம் ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள்- இதாங்க விஷயம்

மலையாள சினிமா படங்கள் இப்போது நிறைய தமிழில் வர ஆரம்பித்துள்ளன. ஒரு சில படங்கள் ரீமேக் செய்யப்படுகிறது.

அப்படி மலையாள படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் படு பிரம்மாண்டமாக கொண்டாடிய படம் என்றால் பிரேமம் தான்.

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்க நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா என பலர் நடித்திருந்த இப்படம் அவர்களின் சினிமா பயணத்திற்கே ஒரு முக்கிய படமாக அமைந்தது என்று கூறலாம்.

சென்னையில் மட்டுமே இப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. தற்போது இப்படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டனவாம். அதனை நினைவு படுத்தும் விதமாக நிவின்பாலி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.