Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா டிரைலரால் ரஜினி-விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்

ரஜினி-விஜய் இருவருமே சினிமாவை தாண்டி அரசியல் பேச்சுக்கு அதிகம் பேசப்படுபவர்கள். ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டார் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

இந்த நேரத்தில் நேற்று ( மே 28) ரஜினியின் காலா படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் சிவப்பு நிற பொடிகள் தூவியது போல் ஒரு காட்சி. அதை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி விஜய்யின் மெர்சலில் தான் முதலில் வந்தது, அந்த காட்சி கொடுத்த ஒரு பிரம்மாண்டம் இதில் இல்லை என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

ரஜினி ரசிகர்களும் ஒரு சில காட்சிகளை குறிப்பிட்டு இதுபோல் யாராலும் நடிக்க முடியாது என்று அவர்களும் தங்கள் தலைவனை பற்றி பெருமையாக டுவிட் போட்டுள்ளனர்.

இப்படி இருவரும் மாற்றி மாற்றி டுவிட் போட டுவிட்டர் பக்கமே கொஞ்ச நேரம் கலவரமாக இருந்தது.