Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகமெங்கும் அன்றைக்கு தளபதி ஆட்டம் தான்- விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்

முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் எப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் தான் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது.

அடுத்து இம்மாதம் ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வர இருக்கிறது. இதற்காக நிறைய ஸ்பெஷல் பிளான்கள் ரசிகர்கள் போட்டுவிட்டனர்.

விஜய் பிறந்தநாளுக்காக ஒரு ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிரபுதேவா-விஜய் கூட்டணியில் தயாராகி மாஸ் வெற்றிபெற்ற போக்கிரி படம் தமிழகமெங்கும் ஜுன் 22ம் தேதி தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல் பல திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாக இருக்கிறதாம். அதற்கான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.