Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களையும் கொண்டாட வைத்த ஒரு படம் மெர்சல். விஜய்-அட்லீ கூட்டணியில் தயாரான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் கலெக்ஷனில் பல சாதனைகள் செய்தது.

தற்போது மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் தமிழில் வெளியான டானு டானு என்ற பாடல் தான் 54 மில்லியன் அதிக பார்வையாளர்களை பெற்று முன்னிலையில் இருந்தது, ஆனால் இந்த சாதனை செய்ய இப்பாடலுக்கு 2 வருடம் ஆனது.

ஆனால் விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் 6 மாதத்தில் இந்த சாதனையை செய்துள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.