Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன ஆச்சு ஹரி சார், நம்பலாமா உங்களை- ரசிகர்கள் கேள்வி

ஹரி தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் ரியல் சாமி. ஏனெனில் கொடுத்த பட்ஜெட்டை விட குறைவாக எடுத்து, அதிக லாபம் பார்ப்பதில் வல்லவர்.

அதை விட சொன்ன நேரத்தில் படத்தை எடுத்து எந்த ஒரு தடங்கல் இல்லாமல் படத்தை முடித்து கொடுப்பவர், இவர் சமீப காலமாகவே சூர்யாவுடனே நீண்ட வருடங்கள் ட்ராவல் செய்தார்.

இதற்கு முக்கிய காரணம் சிங்கம் சீரியஸ் தான், ஒரு வழியாக அதிலிருந்து வெளியே வந்து சாமி-2வை கையில் எடுத்தார்.

விக்ரம் திரைப்பயணம் மட்டுமின்றி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படம் சாமி, இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்றது என்றதுமே ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு இருந்தது.

இன்று அனைவரும் எதிர்ப்பார்த்தப்படி இப்படத்தின் ட்ரைலர் வர, இந்த படத்தையா? நாம் எதிர்ப்பார்த்தோம் என நினைக்கும்படி ஆகிவிட்டது.

ஆம், அந்த அளவில் தான் உள்ளது படத்தின் ட்ரைலர், முதல் மைனஸ் சாமி பிஜிஎம், அதை கேட்கும் போதே ஒரு புத்துணர்ச்சி வரும்.

ஆனால், இதில் தேவி ஸ்ரீபிரசாத் ஏதோ கடமைக்கு என்று ஒரு பிஜிஎம் போட்டுக்கொடுத்துள்ளார், அங்கேயே ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு குறைந்துவிட்டது.

அதைவிட ட்ரைலர் எடிட்டிங், ஒளிப்பதிவு என எதிலுமே ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான குவாலிட்டி இல்லை, சரி சாமி என்றாலே வசனம் அனல் பறக்கும் என்று பார்த்தார், நான் சாமி இல்லை பூதம் என்கின்றார் விக்ரம்.

ஏதோ ஸ்கூல் விழாவில் சிறுவர்கள் பேசுவது போல் உள்ளது, மொத்தத்தில் கொஞ்சம் கூட ரசிகர்களை திருப்திப்படுத்தாத ஒரு ட்ரைலர் என்றால் சாமி-2. ரசிகர்கள் ரொம்ப எதிர்ப்பார்க்குறாங்க ஹரி சார்.