Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான சூழ்நிலையில் காலா படத்திற்கு வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பு! தற்போதைய நிலவரம்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தது. மும்பை வாழ் தமிழர் திரவியம் என்பவரின் வாழ்க்கையில் காட்டுகிறது.

அண்மையில் அவரின் மகன் ஜவஹர் தன் அப்பாவை தவறாக காட்டியிருப்பதாக படத்திற்கு தடை கேட்டு நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை பார்க்காமல் எப்படி படத்தில் குறை சொல்ல முடியும் என கேள்வி எழுப்பி தடை விதிக்க மறுத்துவிட்டார்கள்.

மேலும் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். காலா படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இப்படமும் அவரின் ஆன்மிக அரசியலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் ரசிகர்கள் பல கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். மதுரையில் உள்ள ரசிகர்கள் கடவுளை வேண்டி மண் சோறு சாப்பிட்டு அவர்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

மேலும் நாளை முதல் வரும் ஞாயிற்றுகிழமை வரை காலா படத்திற்காக அதிகாலை சிறப்புக்காட்சிகளை நடத்த என தியேட்டர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளது.