Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் அடுத்த படத்தில் அவர் இப்படி தான் நடிக்கிறாராம்! சுவாரசியமான தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்மைப்புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். நரைத்த தாடியையும், தலை முடியையும் கருப்பு நிறத்தில் மாற்றிவிட்டார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த லுக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்திற்காக தானாம். இப்படத்திற்கான படப்பிடிப்புகளுக்காக் ரஜினி டேராடூன் சென்றுவிட்டார்.

படக்குழுவும் வேலைகளை முன்பே தொடங்கிவிட்டது. மேலும் இப்படம் அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியிலும் இமயமலை அடிவார பகுதிகளில் எடுக்கப்படவுள்ளதாம்.

மேலும் கல்லூரி என்பதால் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல் பரவிவருகிறது. அத்துடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம் என கூறியுள்ளார்.