விஜய்யின் சர்கார் படத்தில் ஆளப்போறான் தமிழன் போல் பாடல் உள்ளதா?- பாடலாசிரியர் விவேக் பதில்
கடந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களை புரட்டிபோட்ட ஒரு பாடல் ஆளப்போறான் தமிழன். நிஜமாகவே அப்பாடலை கேட்டால் ஏதோ ஒரு உணர்வு நமக்குள் தோன்றும். அப்படி ஒரு ஹிட் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க விஜய் நடித்திருந்தார்.
இப்போது இந்த மூவரும் சர்கார் படத்திலும் இணைந்துள்ளனர். ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் ஆளப்போறான் தமிழன் போல் இந்த படத்தில் பாடல் இருக்குமா என்பது தான்.
இந்த கேள்வியை சமீபத்தில் பாடலாசிரியர் விவேக் அவர்களிடம் கேட்க அவர், அந்த படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்பது போல் ஒரு பாடல் அமைந்தது. இப்படத்தில் கதைக்கு தேவைப்படும் விதமாக பாடல் அமையும். சமூக அக்கறை கொண்ட பாடல் சர்கார் படத்தில் இருக்கும் என கூறியுள்ளார்.