அஜித் விசுவாசம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். இந்த படப்பிடிப்பில் படத்தின் பாதி வேலைகள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் நயன்தாரா உள்பட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அஜித் தன் பட வேலைகளுக்கு நடுவில் பிரியாணி செய்வது, புகைப்படங்கள் எடுப்பது என இப்போது சில வேலைகளை செய்து வருவதாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். வேதாளம் படப்பிடிப்பின் போது ஸ்ருதிஹாசனை அழகாக புகைப்படம் எடுத்த அஜித் இப்போது நயன்தாராவையும் எடுத்துள்ளாராம்.
முதற்கட்ட படப்பிடிப்பின் போது அவரை வைத்து எடுத்த புகைப்படங்கள் அஜித் இப்போது நயன்தாராவுக்கு பரிசாக கொடுத்தாராம். அதைப்பார்த்து நயன்தாரா மிரண்டு போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.