Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பு நிறுவனத்தின் அலட்சியத்தால் கை மாறுகிறதா பார்ட்டி?

அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் தற்போது ஜெய், சிவா, ’கயல்’ சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி போன்ற தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்களை வைத்து இயக்கும் படம் தான் பார்ட்டி. மேலும் இதில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோரும் நடிக்கின்றனர்.

படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் படத்தின் இசை வேலையை வெங்கட் பிரபுவின் தம்பியும் சில படங்களுக்கு இசையமைத்த பிரேம்ஜி கவனிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாரான நிலையில், படத்தை வாங்கிய லைகா நிறுவனம் பார்ட்டியில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. (ஏனெனில் லைகா 2.0, சூர்யா படம் என பிரமாண்ட படங்களை தயாரித்து வருகின்றது).

இதனால் அதிருப்தியுற்ற இயக்குனர் வெங்கட்பிரபு நீண்ட ஆலோசனைக்கு பிறகு படத்தின் ரைட்ஸ் உரிமையை லைகாவிடமிருந்து திரும்ப வாங்கி தயாரிப்பாளர் டி.சிவாவிடமே கொடுத்துள்ளார். எனவே படத்தை வெளியிடும் வேலையையும் டி.சிவாவே கவனிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் பாடியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் ‘ச்சா...ச்சா..சாரே..’ பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. இதன் ப்ரோமோ தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.