Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி ஸ்டைலில் சென்சார் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2- ரகளையான போட்டோ உள்ளே

சிவா நடித்து சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2. முதல் பாகத்தில் சினிமாவை மட்டுமே கலாய்த்து உருவாகியிருந்தது. ஆனால் இப்பாகத்திலோ சினிமாவையும் தாண்டி அரசியல் உள்பட தற்சமயம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கலாய்த்து உள்ளனர்.

இதனால் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. படம் மட்டுமல்லாமல் படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக தினம் ஒரு போஸ்டரை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படம் இம்மாதம் 13ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.

படத்தை பார்த்த அவர்கள் படத்திற்கு யு சான்றிதழை அளித்துள்ளனர். வெளியே நடக்கும் சிறு விஷயத்திற்கே பயங்கரமாக போஸ்டர் போட்டு கலாய்க்கும் தமிழ்படக்குழு அவர்களது இந்த யு சான்றிதழ் வாங்கியதை சும்மாவா விடுவார்கள்.

அவர்கள் இந்த யு சான்றிதழ் விஷயத்தை பாகுபலியில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வருவது போல, சிவா யு எழுத்தை தூக்கிக் கொண்டு வருவது போன்ற போஸ்டரை போட்டு மறுபடியும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் வர வழைத்துள்ளனர். அந்த போஸ்டர் இதோ..