Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் மெர்சல்.

இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, விஜய் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் மெர்சல் தான்.

இந்நிலையில் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல், ஆடியோ, வீடியோ சேர்த்து யு-டியூபில் 10 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் 10 கோடி ஹிட்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.