Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்

கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு என்று சில செண்டிமெண்ட் உள்ளது, அதில் முக்கியமாக கார்த்தியையும் கிராமத்து படங்களையும் பிரிக்க முடியாது போல.

ஏனெனில் கார்த்தி முதன் முறையாக அறிமுகமானது பருத்தீவீரன் என்ற கிராமத்து படத்தில், அதை தொடர்ந்து அவரின் திரைப்பயணத்தில் அதிக லாபம் கொடுத்தது கொம்பன் என்ற கிராமத்து படம்.

அதேபோல் மூன்றாவது முறையாக கடைக்குட்டி சிங்கம் என்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் கார்த்தி நடித்துள்ளார், இப்படம் ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

கிராமத்து கதையில் கார்த்தி ஹாட்ரிக் அடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.