Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகருடன் இணையும் அறம் பட இயக்குனர்- வடசென்னையை பற்றிய மேலும் ஒரு படம்

கோபி நயினார் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் தான், அறம். இப்படத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்கடராக நம்பர் ஒன் நாயகி நயன்தாரா நடித்திருந்தார்.

படம் முழுக்க முழுக்க காட்டூர் என்ற கிராமத்தை சுற்றியே இருக்கும். அந்த கிராமத்திற்கு அருகில்தான் இயக்குனரின் கிராமமும் அமைந்திருந்ததால் கிராமாத்தின் உண்மை நிலைமையை தனது படத்தின் மூலம் வெளிக்காட்டி இருந்தார்.

மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்த இப்படத்திற்கு அடுத்ததாக எந்த படத்தை இயக்க போகிறார் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் அடுத்ததாக தற்போது முன்னணியில் இருக்கும் ஆர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

வடசென்னையை பற்றிய இப்படத்தில் ஆர்யா பாக்ஸாராக நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் விரைவில் வெளியிடபடுமாம்.