Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கழுகு 2வில் கூறப்பட இருக்கும் ஆந்திர முதல்வரின் பிண்ணனி- ஆக்‌ஷனில் கலக்க இருக்கும் கிருஷ்ணா

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான், கழுகு. சத்யசிவா இயக்கியிருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த குழு அப்படியே கழுகின் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மூணார் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. முதல் பாகத்தில் சூசைட் பாயிண்டிலிருந்து தற்கொலை செய்பவர்களின் உடல்களை மீட்பவராக நடித்திருந்தார், கிருஷ்ணா. ஆனால் இப்படத்தில் காட்டில் செந்நாய்களை வேட்டையாடுபவராக நடித்துள்ளார். இதனால் இப்படத்தில் செந்நாய்களுடனான சண்டைக்காட்சிகள் பயங்கரமாக இருக்குமாம்.

மேலும் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் உயிரிழக்கும் ஹெலிகாப்டர் சம்பவத்தையும் சேர்த்துள்ளனர். அப்போது முதல்வரை கண்டுபிடிக்க ராணுவ படையினருக்கு கிருஷ்ணா உதவுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.