Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்திற்கே இப்படி ஒரு பிரச்சனையா?- 2.0 பட அப்டேட்

ஷங்கர் இயக்கத்தில் அதிக தொகையில் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் தயாராகி வருகிறது ரஜினியின் 2.0. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் கடந்த ஒரு வருடமாக படத்தின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய்யுள்ளது.

கடைசியில் படக்குழு வரும் நவம்பர் 29ம் தேதி பட ரிலீஸ் என்று அறிவித்துவிட்டனர். ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததால் விநியோகஸ்தர்கள் படத்திற்காக கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

அந்த சமயத்தில் ஷங்கர் இதுவரை உருவான சில காட்சிகளை காட்ட விநியோகஸ்தர்கள் சமாதானம் ஆகி பணம் வாங்கவில்லையாம். ரஜினி படத்தையே நம்பாமல் விநியோகஸ்தர்கள் இப்படி செய்துவிட்டார்களே என அவர்கள் மீது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.