Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.ஏ.சந்திரசேகரை காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்? சிம்ரன் ரசிகர்களுக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்ரன், வில்லன்களாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா போன்றோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் பகலில் தான் பேராசிரியராம், இரவில் கெட்டவர்களை அடக்கும் தாதாவாம்.

இது ரஜினியை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்த நான் சிகப்பு மனிதன் படத்தை போன்று உள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் என்ன வித்தியாசம் வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சிம்ரனுக்கும் காலா ஈஸ்வரியை போன்று பேசப்படும் கதாபாத்திரமெல்லாம் இல்லையாம் பிளாஷ்பேக்கில் வந்து போக கூடிய சிறிய ரோல்தானாம்.