Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்

அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது, அவர் இளம் இயக்குனர்களுடன் இணைய வேண்டும் என்பது. ஆனால் அவர் தொடர்ந்து 4வது முறையாக சிவாவுடனேயே படங்கள் நடித்து வருகிறார்.

இனி வரும் படங்களிலாவது புதிய கூட்டணி அமையுமா என்ற ஏக்கம் தல ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தீரன் பட இயக்குனர் வினோத், விக்ரம் வேதா புகழ் புஷ்கர்-காயத்ரி போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அஜித்தின் அடுத்த படத்திற்காக கூறப்பட்டன.

கடைசியில் இப்போது என்னவென்றால் அஜித் அடுத்து வினோத்துடன் இணைவது உறுதி என்கின்றனர். நமக்கு கிடைத்த தகவலும் அஜித் யோசிப்பதும் சரியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.