Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா ஆடியோ வெளியீட்டுக்கு படக்குழு மாஸ் பிளான்- இதுவே அதிரடியா இருக்கே

சீமராஜா என்ற படம் தான் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது. பொன்ராம் இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

வரும் 25ம் தேதி படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ரிலீஸ் குறித்து தகவல் வந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மதுரையில் படு பிரம்மாண்டமாக பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆக இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் கிராமத்து பக்கம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மதுரையில் நடக்கப்போகும் விழா செம மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர், அதோடு பெரிய எதிர்ப்பார்ப்பிலும் இருக்கின்றனர்.