சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் NGK. இந்த படத்தை Dream warrior pictures சார்பில் தயாரிப்பாளர் S.R.பிரபு தயாரித்திருந்தார். படம் வருகிற தீபாவளிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வருகிற 22ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை முடித்து அதாவது சூர்யாவிற்கு அடுத்தப்படியாக நடிகர் சிபிராஜ் நடிக்கும் படத்தை S.R.பிரபு தயாரிக்க இருக்கிறார். படத்தின் தலைப்பு வட்டம் என கூறப்படும் நிலையில் மதுபானகடை என்ற படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.
படத்தை பற்றிய மேலும் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.