100 ஆண்டுகால தமிழ் சினிமாவை புரட்டி பார்த்தால் அதில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்தார்.
1996ல் வெளியாகியிருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்படவுள்ளது. இதிலும் கமல் தான் ஹீரோ நயன்தாரா ஹீரோயின். ரஜினியின் 2.0 பட வேலையில் இருக்கும் ஷங்கர் அப்படத்தையும் பாதியிலேயே விட்டுவிட்டு இந்த படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் இளம் ஹீரோ ஒருவரை ஷங்கர் தேர்வு செய்துள்ளாராம். ஆனால் அவர் யார் என்பது வெளியிடப்படாமல் உள்ளது. மேலும் இந்த படத்தில் ஏற்கனவே ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.