Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?

விஜய் ரசிகர்களின் நாடிதுடிப்பெல்லாம் சர்கார் படம் பற்றி தான். இந்த தீபாவளியை தளபதியின் ஸ்பெஷலோடு கொண்டாட வேண்டும் என்பது ரசிகர்களின் இப்போதைய ஆசை.

படக்குழுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் படப்பிடிப்பு வேலைகளை சரியாக செய்து வருகின்றனர்.

வரும் ஜுலை 27ம் தேதி படக்குழு USA செல்ல இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம். வரும் ஆகஸ்ட் 6ம் தேதி தான் வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம் அங்கு 11ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்திவிட்டு மீண்டும் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்த சின்ன மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் எதுவானாலும் சரி எங்களுக்கு தீபாவளிக்கு தளபதி விருந்து கொடுத்தால் போதும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.