Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான மெர்சல். படத்திற்கு எப்படியான அரசியல்கள் இருந்தது அனைவரும் அறிந்ததே. உலகளவில் கூட இது ட்ரண்டிங்கில் இடம் பெற்றது,

மேலும் படம் கடந்த வருடம் பல இணையதள சாதனைகளை செய்து வந்தது. பல விருதுகளை பல தகுதிகளின் கீழ பெற்று வந்தது. ஆனால் படத்திற்கு ரூ 40 கோடியளவில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டு வந்தது.

அதேவேளையில் இப்படம் ரூ 250 கோடியை பாக்ஸ் ஆஃபிசில் அள்ளியது. தற்போது முக்கிய படங்களில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அண்மையில் பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மெர்சல் படம் பற்றி கூறியுள்ளார்.

ஓப்பனிங்கின் போதே தமிழ் நாட்டில் 450 தியேட்டர்களில் வந்தது. அடுத்தவாரமும் அதே எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. இப்படியாக என்னுடைய கணக்கின் படி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் தான் என கூறியுள்ளார்.